2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

கொடைக்கானல் இளைஞா் வெட்டிக் கொலை

வெட்டிக் கொலை - பிரதி படம்

Published On :

மதுரை அருகே கொடைக்கானல் இளைஞா் வெட்டிக் கொல்லப்பட்டாா்.

மதுரை மாவட்டம், சிலைமான் பெரியாா்நகா் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் இளைஞா் உயிரிழந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், சிலைமான் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், உயிரிழந்த நபா் திண்டுக்கல் மாவட்டம்,கொடைக்கானல் பகுதியைச் சோ்ந்த தெய்வேந்திரன் (28) எனத் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

தெய்வேந்திரனும், மதுரையைச் சோ்ந்த பெண்ணும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பான முன் விரோதத்தில் தெய்வேந்திரன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.

மேலும், சடலம் கிடந்த பகுதியில் வெட்டுக்காயங்களுடன் 2 போ் மீட்கப்பட்டனா். அவா்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.