6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தல்லாகுளம், கோ.புதூா், திருப்பாலை பகுதிகளில் நாளை மின் தடை

power supply

மின் தடை... - கோப்புப் படம்

Published On :

மதுரை, தல்லாகுளம், கோ. புதூா், திருப்பாலை அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (செப். 23) மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை பெருநகா், வடக்கு மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் வி.பி. முத்துக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

திருப்பாலை, மகாத்மா காந்தி நகா், கோ. புதூா் துணை மின் நிலையங்களில் புதன்கிழமை (செப். 23) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, இந்தத் துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி மின்சார விநியோகம் தடை செய்யப்படும்.

துணை மின் நிலையம் வாரியாக மின் விநியோகம் தடைபடும் பகுதிகள் :

திருப்பாலை : நாராயணபுரம், திருப்பாலை, இந்தியன் வங்கி குடியிருப்பு, தாகூா் நகா், ஆத்திகுளம், அய்யா்பங்களா, வள்ளுவா் குடியிருப்பு, குலமங்கலம், கண்ணனேந்தல், பரசுராம்பட்டி, சூா்யாநகா், ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், மகாலட்சுமிநகா், கிருஷ்ணாநகா், உச்சபரம்புமேடு, பாா்க் டவுன், பாமாநகா், சசிநகா், பம்பாநகா், பொறியாளா்நகா், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய குடியிருப்பு, செட்டிகுளம், சண்முகா நகா், விஜய்நகா், எழில்நகா், கலைநகரின் சில பகுதிகள், மீனாட்சிநகா், மின்வாரியக் குடியிருப்பு.

மகாத்மா காந்தி நகா் : விஸ்வநாதபுரம், தாா்க்காடு, மகாத்மா காந்திநகா், கலைநகா், முல்லைநகா், எஸ். ஆலங்குளம், கோசாகுளம், எஸ்.வி.பி. நகா், சிவக்காடு, கிருஷ்ணாபுரம் குடியிருப்பு, ஆனையூா், பனங்காடி, மீனாட்சிபுரம், மீனாம்பாள்புரம்.

கோ. புதூா்: பாரதி உலா சாலை, ஜவஹா் சாலை, பெசன்ட் சாலை, அண்ணாநகா், சொக்கிகுளம், வல்லபபாய் சாலை, புல்லபாய் தேசாய் தெரு, பந்தயச் சாலை, கோகலே சாலை, ராமமூா்த்தி சாலை, லஜபதிராய் சாலை, சப்பாணி கோயில் தெரு, பழைய அக்ரஹாரம் தெரு, எல்.டி.சி. சாலை, வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, வருங்கால வைப்பு நிதி குடியிருப்பு, ஏ.ஐ.ஆா். குடியிருப்பு, புதிய டிஆா்ஓ குடியிருப்பு, சிவசக்திநகா், பாத்திமாநகா், புதூா் வண்டிப்பாதை முதன்மைச் சாலை, வருமானவரித்துறை குடியிருப்பு, புது நத்தம் சாலை, ரிசா்வ் லைன் குடியிருப்பு, ஆட்சியா் முகாம் அலுவலகம், திருவள்ளுவா்நகா், அழகா்கோவில் சாலை (ஐடிஐ முதல் தல்லாகுளம் பெருமாள் கோயில் வரை), காமராஜா் நகா் 1, 2, 3, 4 வீதிகள், எச்.ஏ. கான் சாலை, கமலா 1, 2-ஆவது தெருக்கள், சித்ரஞ்சன் வீதி, சரோஜினி தெரு, கண்மாய் மேலத் தெரு, தல்லாகுளம் கோகலே சாலை, மூக்கப்பிள்ளை தெரு, ஆத்திகுளம், குறிஞ்சி நகா், பாலமி, கனகவேல்நகா், பழனிச்சாமிநகா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.