புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ராமநாதபுரம் ஊரக வளர்ச்சித் துறை இல்லத்தில் ஜன.7 ஆம் தேதி காலை நடைபெறும்

ராமநாதபுரம் ஊரக வளர்ச்சித் துறை இல்லத்தில் ஜன.7 ஆம் தேதி காலை நடைபெறும் கருத்தரங்கிற்கு கிரியேட் அறக்கட்டளைத் தலைவர் பேராசிரியர் பி.துரைசிங்கம் தலைமை வகிக்கிறார். ஆட்சியர் க.நந்தகுமார் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசுகிறார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 8:24 pm

தினமணி

ராமநாதபுரம் ஊரக வளர்ச்சித் துறை இல்லத்தில் ஜன.7 ஆம் தேதி காலை நடைபெறும் கருத்தரங்கிற்கு கிரியேட் அறக்கட்டளைத் தலைவர் பேராசிரியர் பி.துரைசிங்கம் தலைமை வகிக்கிறார். ஆட்சியர் க.நந்தகுமார் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசுகிறார்.

  இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார், உணவுப் பாதுகாப்பும் இயற்கை வேளாண்மையும் என்ற தலைப்பில் பேசுகிறார். ஏற்பாடுகளை கிரியேட் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.ராமநாதபுரம், ஜன. 5:    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்டோக்களில் கூடுதல் பயணிகளை ஏற்றிச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அதிகாரி கார்த்தலிங்கன் எச்சரித்துள்ளார்.

  இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

  ராமநாதபுரம் மாவட்டத்தில் அபே மற்றும் இதர ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான பயணிகளை ஏற்றுவதும், கூடுதலாகப் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்வதும் தெரிய வந்துள்ளது.

  ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் பயணிகளையும், பள்ளிக் குழந்தைகளையும் ஏற்றிச் செல்வது ஆபத்தானது. அனுமதிச்சீட்டு நிபந்தனைகளையும் மீறிய செயல். அதிகமாள பயணிகளை ஏற்றிச் செல்வதால் விபத்துகள் ஏற்பட்டு

உயிரிழப்புகளால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

  விபத்துகளைத் தவிர்க்க இக்குற்றங்களைக் கண்டறிந்து அபராதம், தண்டனைகள்  விதித்தபோதிலும் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

  ஆகவே ஆட்டோ டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களில் அதிகமான பயணிகளை ஏற்றிச்சென்று ஆபத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாதென்று இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறார்கள்.

  இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட ஓட்டுநர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதுடன் அனுமதியையும் ரத்து செய்ய ஏதுவாகும்.  இக்குற்றங்கள் அனைத்தும் குற்றவியல் நடைமுறைப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

  ஆட்டோக்களில் அனுமதிக்கப்படும் அளவு 3 பேர் மட்டுமே. இதில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அனுமதிக்கப்பட்ட அளவைவிட 1.5 சதவிகிதம் மிகாமல் அனுமதிக்கலாம்.

  பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி வழங்கப்படும் இக்கருத்துக்களை பெற்றோர்கள் தவறாமல் பின்பற்றி விபத்தில் உயிர்ப்பலி ஏற்படுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.