47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கந்து வட்டி வசூல்: இருவருக்கு தலா 2 ஆண்டு சிறை

பரமக்குடியில் கந்து வட்டி வசூலித்தவர்களுக்கு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பி.ரேவதி 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து சனிக்கிழமை தீர்ப்பளித்தார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 8:22 pm

தினமணி

பரமக்குடியில் கந்து வட்டி வசூலித்தவர்களுக்கு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பி.ரேவதி 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து சனிக்கிழமை தீர்ப்பளித்தார்.

  பரமக்குடி கண்ணகி தெருவைச் சேர்ந்த நாகுத்தேவர் மகன் ராஜேந்திரன்(53), வேளார் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் கிருஷ்ணன்(43), முனியசாமித் தேவர் மனைவி குருவம்மாள் ஆகியோர் 2000-ம் ஆண்டிலிருந்து அரசு அனுமதியின்றி வட்டி தொழில் செய்து வந்துள்ளனர்.

  கீழப்பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த கண்ணன் மனைவி சந்தனமாரி(44) என்பவர் கிருஷ்ணன், குருவம்மாள் ஆகியோரிடம் 2003-ம் ஆண்டு ரூ.10 ஆயிரம் வட்டிக்கு வாங்கினார். இதில் ரூ.18 ஆயிரம் திருப்பிச் செலுத்தியுள்ளார். மீதம் ரூ.70 ஆயிரம் கட்டவேண்டும் எனக்கூறி வெற்றுப் பத்திரத்தில் எழுதி வாங்கியுள்ளனர்.

  அதே நபர் ராஜேந்திரனிடம் ரூ.20 ஆயிரம் வட்டிக்கு வாங்கியுள்ளார். அதற்கு வட்டியும், அசலும் ரூ.65 ஆயிரம் செலுத்த வேண்டும் என வெற்று பத்திரங்களில் எழுதி வாங்கியுள்ளார்.

  அதேபோல் ராஜேந்திரனிடம் காமராஜர் தெருவைச் சேர்ந்த முகமதுஅலி மனைவி செல்லப்பாத்து 2003-ம் ஆண்டு ரூ.50 ஆயிரம் வாங்கியதற்கு ரூ 2.20 லட்சமும், 7.5 பவுன் நகையும் கொடுத்துள்ளார். அவரையும் மிரட்டி ரூ 1.50 லட்சம் தரவேண்டும் என எழுதி வாங்கியுள்ளார்.

  அதே நபர் முனியம்மாள் என்பவரிடம் ரூ.3 ஆயிரம் கொடுத்துவிட்டு ரூ.15 ஆயிரம் கொடுக்க வேண்டும் என அவமானப்படுத்தியுள்ளார். 2004-ம் ஆண்டு ராஜேந்திரனிடம் செல்வி என்பவர் ரூ.15 ஆயிரம் வாங்கிவிட்டு ரூ.75 ஆயிரம் செலுத்தியுள்ளார்.

  இது குறித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் 2004-ம் ஆண்டு சந்தனமாரி, செல்லப்பாத்து, முனியம்மாள், செல்வி ஆகியோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் ராஜேந்திரன், கிருஷ்ணன், குருவம்மாள் ஆகியோர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

  இந்த வழக்கு விசாரனை பரமக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

 இதை விசாரித்த நீதிபதி பி.ரேவதி அரசு அனுமதியின்றி கந்துவட்டி தொழில் செய்த குற்றத்துக்காக ராஜேந்திரன், கிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், குருவம்மாளுக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.