இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பாஸ்போர்ட் பெற போலி ஆவணங்கள்:இளைஞர் கைது: பெண் தலைமறைவு  

போலி ஆவணங்கள் தாக்கல் செய்து பாஸ்போர்ட் பெற  முயற்சித்ததாக இளைஞரை

Updated On :13 மே 2013, 12:04 am IST

போலி ஆவணங்கள் தாக்கல் செய்து பாஸ்போர்ட் பெற  முயற்சித்ததாக இளைஞரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸார், தலைமறைவாக உள்ள பெண்ணைத் தேடி வருகிறார்கள்.

   சாயல்குடி காவல் சரகம், ஒப்பிலானைச் சேர்ந்த முகம்மது கானின் மகன் தமீன் அன்சாரி (23). இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அதுபோல்  அதே ஊரைச் சேர்ந்த முகம்மது கமீது மகள் ஹன்சியஸ் நஸ்லினும் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அதில் தமீன் அன்சாரி போலி பள்ளி படிப்புச் சான்றிதழ் கொடுத்திருந்ததும், ஹன்சியஸ் நஸ்லின் போலி பிறப்புச் சான்றிதழ்  கொடுத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணீஸ்வர ராஜா சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் லாமேக் வழக்குப் பதிவு செய்து, தமீன் அன்சாரியை கைது செய்தனர். முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட தமீன் அன்சாரியை 15 நாள் காவலில் வைக்க குற்றவியல் நடுவர் சி.மோகன்ராம் உத்தரவிட்டார். ஹன்சியஸ் நஸ்லின் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார்  தேடி வருகிறார்கள்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.