தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு! எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் அவசர கூட்டம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் இலவசப் பயிற்சி வகுப்பு தொடக்கம்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தின் சார்பில் இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :19 ஜூலை 2016, 12:53 am IST

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தின் சார்பில் இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

   விழாவுக்கு முன்னோடி வங்கி மேலாளர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். வங்கியின் நிதி ஆலோசகர் எஸ்.ராமச்சந்திரன், அலுவலர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கனரா வங்கியின் முதுநிலை மேலாளர் கருப்பையா தொழில் நேர்மை, சுயதொழிலுக்கு அரசு வழங்கும் கடனுதவிகள் குறித்துப் பேசினார். சுந்தரேசன் பயிற்சியளித்தார். 30 நாள்களுக்கு நடைபெறும் இப்பயிற்சி முடிந்தவுடன் வங்கிக் கடன் பெறுவதற்கு சான்றிதழ் வழங்கப்படும் என பயிற்சி மைய இயக்குநர் சியாமளாகுமார் தெரிவித்தார்.  பயிற்சியாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.