மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கமுதி அருகே அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி: மாணவர்கள் தவிப்பு

கமுதி அருகே அரசு சின்ன உடப்பன்குளம் அரசு நடுநிலைப் பள்ளியில் விளையாட்டு உபகரணங்கள், குடிநீர் ஆதார அமைப்புகள், கழிப்பறைகள்

News image
Updated On :28 டிசம்பர் 2017, 7:42 pm

DIN

கமுதி அருகே அரசு சின்ன உடப்பன்குளம் அரசு நடுநிலைப் பள்ளியில் விளையாட்டு உபகரணங்கள், குடிநீர் ஆதார அமைப்புகள், கழிப்பறைகள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் இப்பள்ளியில் மாணவர்களின் விளையாட்டு வசதிக்காக  பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் இருந்தன. இவை தற்போது முற்றிலும் சேதமடைந்து உள்ளன. இந்த உபகரணங்களை பயன்படுத்தும் மாணவர்களுக்கு காயம் ஏற்படக்கூடும் என்பதால், பள்ளி நிர்வாகம் சேதமடைந்த உபகரணங்கள் மீது சீமைக்கருவேல முள் செடிகளை வைத்து, தடுப்பு ஏற்படுத்தியுள்ளது.  
   பள்ளி வளாகத்தில் குடிநீருக்காக அமைக்கபட்ட ஆழ்குழாய்க் கிணற்றில் மின் சாதனங்கள் திருடுபோனதால் குடிநீர் வசதி இல்லை. இதனால் மாணவர்கள் மதிய உணவு சாப்பிடுவதற்காக குடிநீர் கேட்டு அருகிலுள்ள வீடுகளுக்குச் செல்கின்றனர். மேலும் கழிப்பறைகளில்  தண்ணீர் வசதியில்லாததோடு சேதமடைந்து இடிந்துகிடக்கின்றன. இதனால் மாணவர்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர்.
  சாலையோரத்தில் உள்ள இப்பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவர் வசதி இல்லாததால், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் பள்ளி நேரங்களில் கட்டடங்கள் அருகே சுதந்திரமாக உலா வருவதால், மாணவர்கள் அச்சத்துடன் படிக்கின்றனர்.
 ஆகவே மாணவர்களின் நலன்கருதி சேதமடைந்த விளையாட்டு உபகரணங்கள், குடிநீருக்கான ஆதார அமைப்புகளை சீரமைத்து, மாணவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் சுற்று சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.