கமுதி அருகே உப்பு நீரை நன்னீராக்கும் திட்டப் பணிகள் முடக்கம்

கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டியில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள் முடிந்து திறக்கபடாமலேயே உள்ளதால்,  கிராம மக்கள் குடிநீருக்காக தவித்து வருகின்றனர்.
Updated on
1 min read

கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டியில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள் முடிந்து திறக்கபடாமலேயே உள்ளதால்,  கிராம மக்கள் குடிநீருக்காக தவித்து வருகின்றனர்.
      ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டியில் வசித்து வரும் 180 குடும்பங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களின் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், 2 ஆண்டுகளுக்கு முன் உப்புநீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் மின் இனைப்புடன் நீர்த் தேக்கத் தொட்டி தொடங்கப்பபட்டது.
    இத்திட்டத்துக்கான அடிப்படை பணிகள், தரைத் தள ராட்சத தொட்டிகள், கட்டுப்பாட்டு அறைகள் ஆகியன கட்டப்பட்டும், தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, குடிநீரைத் தேக்கும் பணிகள் துவக்கப்படவில்லை.
     இதனால், இப்பகுதி கிராம மக்கள் கோவிலாங்குளம், செங்கப்படை பகுதிகளுக்கு 4 கி.மீ. தொலைவு சென்று தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை நீடிக்கிறது. பாம்புல்நாயக்கன்பட்டி கிராம மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உப்புநீரை நல்ல நீராக சுத்திகரிக்கும் நிலைய நீர்த்தேக்கத் தொட்டி முடக்கத்தால், அரசு நிதி வீணடிக்கப்பட்டதுடன், கிராம மக்களின் குடிநீர் தட்டுப்பாடும் தீர்க்கப்படவில்லை.
    எனவே, மாவட்ட நிர்வாகம் கிராம மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com