கமுதி அருகே கிராமத்தில் குடிநீர் பிரச்னை: உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு

கமுதி அருகே ம.பச்சேரி கிராமத்திற்கு குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட அனைத்து
Updated on
1 min read

கமுதி அருகே ம.பச்சேரி கிராமத்திற்கு குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களையும் புறக்கணிக்க  கிராமத்தினர் முடிவு செய்துள்ளனர்.
   ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மண்டலமாணிக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட ம.பச்சேரி கிராமத்தில் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட விவசாயிகள், கூலி தொழிலார்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதி பொது மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யவில்லையாம். இதனால் கிராமத்தில் வசிக்கும் பொது மக்கள், பெண்கள் தற்போது அருகே 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குண்டாறுற்றில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றுக்கு குடிநீர் எடுக்கச் செல்கின்றனர். அங்கு சிறிதளவே ஊறும் தண்ணீரை நள்ளிரவில் தூக்கத்தையும் பொருள்படுத்தாமல் சேகரித்து வரும்  நிலை தொடர்கதையாக உள்ளது.
     இது குறித்து ம.பச்சேரி கிராமத்தினர் கூறியதாவது: குடிநீர் பிரச்னைகுறித்து அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்தல் சமயத்தில் மட்டும் ஓட்டு கேட்டு வரும் அரசியல் கட்சியினர் தங்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றுவதாக உறுதியளித்துவிட்டு செல்கின்றனர்.
  தேர்தலில் வெற்றி பெற்ற பின் அவர்களைப் பார்க்கவே முடியவில்லை. ஒரு குடம் தண்ணீரை ரூ.10-க்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் தான் தற்போது வர உள்ள உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com