பரமக்குடி ஆர்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை சார்பில் புதன்கிழமை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை பள்ளி தலைமையாசிரியர் கே.ராமர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளியில் தொடங்கிய பேரணி ஓட்டப்பாலம், ஐந்துமுனை சந்திப்பு, காந்திசிலை வழியாக நகரின் முக்கிய வீதிகளில் சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. 75 தேசிய மாணவர் படையினர் கலந்துகொண்ட இப்பேரணியில் புற்றுநோய் வராமல் தடுப்பது குறித்தும், இந்நோய் குறித்து கண்டறிந்து சிகிச்சை அளிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோஷங்களை எழுப்பிச்சென்றனர்.
இதற்கான ஏற்பாட்டினை தேசிய மாணவர் படை கமாண்டர் கே.ராஜா செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.