யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பாம்பன் தூக்குப் பாலத்தை கடந்தது "பைலட்' கப்பல்

பாம்பன் தூக்குப்பாலம் வழியாக மும்பையில் இருந்து  மேற்கு வங்கம் மாநிலம் ஹால்டியா துறைமுகத்திற்கு வழிகாட்டும் கப்பல் சென்றது.  

News image
Updated On :9 நவம்பர் 2017, 11:32 pm

DIN

பாம்பன் தூக்குப்பாலம் வழியாக மும்பையில் இருந்து  மேற்கு வங்கம் மாநிலம் ஹால்டியா துறைமுகத்திற்கு வழிகாட்டும் கப்பல் சென்றது.  
  ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் பாலத்தில்  கப்பல் மற்றும் படகுகள்  கடந்து செல்ல வசதியாக தூக்குப்பாலம் உள்ளது. கப்பல் கடக்கும்போது பாலம் இரண்டாகப் பிரிந்து மேல்நோக்கித் திறந்து வழிவிடும் வகையில் இதன் அமைப்பு உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை மும்பையில் இருந்து பெரிய கப்பல்களுக்கு வழிகாட்டும் பைலட் கப்பல் பாம்பன் துறைமுகத்திற்கு வந்தடைந்தது.
  இதனையடுத்து, பாம்பன் தூக்குப்பாலத்தைக் கடந்து செல்ல பாம்பன் துறைமுகத்திடம் அனுமதி கோரப்பட்டு அதற்கான கட்டணம் செலுத்தப்பட்டது. கப்பல் கடந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து வியாழக்கிழமை பாம்பன் ரயில் தூக்குபாலம் திறக்கப்பட்டது. அதை  பைலட் கப்பல் கடந்து சென்றது. இதனை ராமேசுவரம் வந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.