புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ராமநாதபுரத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இடத்தை மாற்றக்கோரி மனு: ஆட்சியர் பரிசீலிக்க உத்தரவு

ராமநாதபுரத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறும் இடத்தை மாற்றக் கோரிய மனுவை பரிசீலித்து 2 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு

News image
Updated On :9 நவம்பர் 2017, 11:31 pm

DIN

ராமநாதபுரத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறும் இடத்தை மாற்றக் கோரிய மனுவை பரிசீலித்து 2 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
ராமநாதபுரம் நகராட்சியில் பொதுமக்களின் பொழுதுபோக்குக்காக பல்வேறு வசதிகளுடன் கூடிய அம்மா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.  ராமநாதபுரத்தில் இந்தப் பூங்காவைத் தவிர்த்து பொதுமக்களின் பொழுதுபோக்கு மற்றும் நடைபயிற்சிக்கான இடங்கள் எதுவும் இல்லை. இந்நிலையில் ராமநாதபுரத்தில் நவம்பர் 25-ஆம் தேதி நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக  அம்மா பூங்காவைத்  தேர்வு செய்துள்ளனர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளும் பெரும் கூட்டத்தாலும், அதற்கான கட்டமைப்பு பணிகளாலும், பல லட்சம் ரூபாய் செலவு செய்து உருவாக்கப்பட்ட பூங்காவின் கட்டமைப்பு சிதைந்துவிடும். பொதுமக்களின் பயன்பாடும் சில நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்படும். எனவே பொதுமக்கள் நலன் கருதி, ராமநாதபுரம் மாவட்டத்தில்  எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறும் இடத்தை மாற்ற உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம். வேணுகோபால், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்து 2 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.