சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

முதுகுளத்தூரில் அரசு கல்லூரி வகுப்பறைகள் திறப்பு

முதுகுளத்தூரில் அரசு கலைக்கல்லூரியின் புதிய கட்டடத்தில் வகுப்பறைகள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 11:31 pm

DIN

முதுகுளத்தூரில் அரசு கலைக்கல்லூரியின் புதிய கட்டடத்தில் வகுப்பறைகள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
   ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 2012-13-இல் துவங்கப்பட்ட அரசு கலை கல்லூரி, முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடத்தில் தாற்காலிகமாக இயங்கி வந்தது. இந்நிலையில் முதுகுளத்தூரில் இருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் ராமநாதபுரம் செல்லும் வழியில் ரூ.7.50 கோடி மதிப்பில் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.  இதனை முதல்வர்  எடப்பாடி கே. பழனிசாமி காணொலி மூலம் அண்மையில் திறந்து வைத்தார். இந்நிலையில் புதன்கிழமை முன்னாள் எம்.எல்.ஏ. முருகன்,  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, குத்துவிளக்கேற்றி அனைத்து பிரிவு வகுப்புகளையும் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் கல்லூரி முதல்வர் விமலா, பேராசிரியர் பாலமுருகன், ஓய்வு பெற்ற ஆசிரியர் துரைப்பாண்டி, அதிமுக ஒன்றிய நிர்வாகி  புளியங்குடி முத்துராமலிங்கம் மற்றும் கல்லூரி பேராசிரியர்களும், அலுவலர்களும்.மாணவர்களும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.