ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரம் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசுப் பள்ளி மாணவிகள் 2 ஆயிரம் பேருக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசுப் பள்ளி மாணவிகள் 2 ஆயிரம் பேருக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
   பெண்கள் தங்களை சமுகவிரோதிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையிலும், தன்னம்பிக்கையுடன் செயல்படுவதுடன், படிப்பில் ஆர்வம் செலுத்தும் விதமாக பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி அறிவுறுத்தலின்படி,  மத்திய அரசின் நிதியிலிருந்து அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 42 பள்ளிகளில் படிக்கும் 2 ஆயிரம் மாணவிகளுக்கு சிறந்த கராத்தே பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.    கடந்த இரண்டு ஆண்டுகளில் இப்பயிற்சி பெற்ற மாணவிகளின் பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். நடப்பு கல்வியாண்டில் செப்டம்பர் மாதம் தொடங்கி வாரம் இருமுறை என 5 மாதங்களுக்கு கராத்தே பயிற்சியளிக்கப்படுகிறது.
இப்பயிற்சியினை அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் ஆர்.சுரேஷ்குமார் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பி.நாகராஜன், பி.ஆர்.பாஸ்கரன், மேற்பார்வையாளர் பி.பாண்டிமாதேவி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com