யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தொண்டியில் மின் கம்பம் சேதம் பொதுமக்கள் அச்சம்

தொண்டியில் சாலை சந்திப்பில் மின்கம்பம் சேதம் அடைந்து ஆபத்தை விளைவிக்கும் நிலையில் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 2:31 am

DIN

தொண்டியில் சாலை சந்திப்பில் மின்கம்பம் சேதம் அடைந்து ஆபத்தை விளைவிக்கும் நிலையில் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்.
  தொண்டியில் முஸ்லிம்கள் பள்ளி வாசல் பகுதிக்கு மக்கள் செல்லும் நான்கு வீதி சாலை சந்திப்பு பகுதியில் மின் கம்பம் சேதம் அடைந்து முறிந்து விழும் நிலையில் உள்ளது. இப்பகுதியில் பலத்த காற்று வீசினால் கூட மின் கம்பம் முறிந்து விழும் நிலையில் இருப்பதால், இப்பகுதியில் அச்சத்துடன் செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
 இது குறித்து இப்பகுதியை சேர்ந்த அப்துல் கரீம் என்பவர்  கூறுகையில், ஆபத்தான நிலையில் மின் கம்பம் உள்ளது. இவ்வழியாகத்தான் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் செல்கின்றனர்.
 எனவே மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இப்பகுதி மக்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளேன் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.