சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

கமுதியில் தனிநபர் இல்லக் கழிப்பறை பயன்பாடு விழிப்புணர்வு கூட்டம்

கமுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தனிநபர் இல்லக் கழிப்பறைகளின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:25 am IST

கமுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தனிநபர் இல்லக் கழிப்பறைகளின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியத்தில் கட்டி முடிக்கப்பட்ட தனிநபர் இல்லக் கழிப்பறைகளை முறையாக பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கமுதி வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கப்பாண்டியன் தலைமையில், ஒன்றிய ஆனையாளர் (கிராம ஊராட்சிகள்) ரவி முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
"முழு சுகாதார தமிழகம் முன்னோடி தமிழகம்' என்ற நோக்கத்தினை அடிப்படையாக கொண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் தனிநபர் கழிப்பறைகள் இல்லாத வீடுகளைக் கணக்கிட்டு அனைத்து வீடுகளிலும் புதிதாக கழிப்பறைகள் கட்டுவதுடன், நூறு சதவீதம் திறந்த வெளியில் மலம், ஜலம் கழித்தலற்ற மாவட்டமாக உருவாக்கிடும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி ஊராட்சி ஒன்றியத்தை திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற முழு சுகாதாரான ஊராட்சி ஒன்றியமாக அறிவிப்பு செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பாக கழிப்பறைகளை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் இந்த கூட்டம் நடைபெற்றது. 
கூட்டத்தில் கமுதி வட்டார ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் நாகரஞ்சித், ஒருங்கிணைந்த குழந்தைகள் வட்டார வளர்ச்சி அலுவலர் விஷ்வாபதி, கமுதி வட்டார வேலாண்மை உதவி இயக்குநர் சேதுராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.