ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் சேத்தாண்டி வேடமணிந்து நேர்த்திக்கடன்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் முத்துமாரியம்மன் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் உடல் முழுவதும் சகதி பூசி சேத்தாண்டி

Updated On :5 ஏப்ரல் 2018, 8:25 am IST

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் முத்துமாரியம்மன் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் உடல் முழுவதும் சகதி பூசி சேத்தாண்டி வேடம் அணிந்து புதன்கிழமை வினோத நேத்திக் கடனை செலுத்தினர்.
  கமுதியில் உள்ள முத்துமாரியம்மன் பங்குனி பொங்கல் விழா கடந்த மார்ச் 22- ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு நாள் தோறும் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தினசரி இரவு முத்துமாரியம்மன் அலங்கரிக்கப்பட்டு  காமதேனு, குதிரை, மயில், யானை,  சிம்ம, வெள்ளிக்குதிரை, அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் கமுதியில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
    புதன்கிழமை  பக்தர்கள்  உடல் முழுவதும் சகதியை பூசி சேத்தாண்டி வேடம் அணிந்து வினோத நேத்தி கடனை செலுத்தினர். மேலும் அக்கினி சட்டி, பால்குடம், ஆயிரம் கண் பானை, அலகு குத்துதல், கரும்பாலை தொட்டி கட்டுதல் உள்ளிட்ட நேத்தி கடன்களை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர்.
   பங்குனி பொஙகல் திருவிழாவை முன்னிட்டு மதுரை, சென்னை, விருதுநகர், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் கமுதி சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முத்துமாரியம்மனை வழிபட்டுச் சென்றனர்.
   திருவிழாவை முன்னிட்டு கமுதி துணை காவல் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.