ராமநாதபுரத்தில் பாலியல் பலாத்கார வழக்கில் தலைமறைவானவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் வெளிப்பட்டினம் பாசிப்பவளக்காரத் தெருவை சேர்ந்தவர் ஜமால் மகன் நியாசுதின். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு அபிராமம் நத்தம் திடல் தெருவை சேர்ந்த முனியான்டி மகள் பரமேஸ்வரியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். திருமணம் செய்ய மறுத்ததால் அபிராமம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
கடந்த 2012 ஏப்ரல் மாதம் முதல் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால் நியாசுதின் (எ) செய்யது முகமது நியாசுதின் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இவரை தேடப்படும் குற்றவாளியாகவும் மாவட்ட மகளிர் நீதி மன்றம் அறிவித்தது. இதனையடுத்து நியாசுதின் பற்றிய தகவல் அறிந்தால் பொதுமக்கள் அபிராமம் காவல் நிலையத்தில் (04576-265229, 8300001279) தகவல் தெரிவிக்குமாறு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தரமான ஆராய்ச்சியே வளர்ச்சி!

ஓமன் கடல் பகுதியில் 24 இந்திய மாலுமிகளுடன் சென்ற எண்ணெய்க் கப்பலில் தீ விபத்து!

வாக்களித்தால் மட்டும் போதுமா?

மது விற்பனை குறித்து புகாா் அளித்த பெண்கள் மீது தாக்குதல்: நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


