மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ராமேசுவரத்தில் கைதான துருக்கி நாட்டவர் புழல் சிறையில் அடைப்பு

இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக படகு மூலம் ராமேசுவரம் வந்த துருக்கி நாட்டவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On :9 ஏப்ரல் 2018, 3:55 am

இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக படகு மூலம் ராமேசுவரம் வந்த துருக்கி நாட்டவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ராமேசுவரம் சேராங்கோட்டை மீனவ கிராமத்தில்  சனிக்கிழமை சுற்றித்திரிந்த துருக்கி நாட்டை சேர்ந்த மகீர்தேவ்ரிமை (65) கடற்கரை காவல்துறையினர் கைது செய்தனர்.  அவரிடம் மத்திய, மாநில உளவுத்துறையினர், இந்திய கடற்படையினர் விசாரணை நடத்தினர். 
அவரிடம் நடத்திய விசாரணையில், இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக படகு மூலம் ராமேசுவரம் வந்தது தெரியவந்தது.  இதனையடுத்து அவர் மீது போலீஸார் பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, திருவாடானை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மகீர்தேவ்ரிம்மை சென்னை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை போலீஸார் அவரை, சிறையில் அடைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.