ராமேசுவரம் மீனவர்கள் மீது ஞாயிற்றுக்கிழமை கற்களை வீசி தாக்கியதோடு, வலைகளை அறுத்து எறிந்தும் இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து சனிக்கிழமை 400 க்கும் மேற்ப்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போது, 6 ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது பாட்டீல்கள் மற்றும் கற்களை வீசி தாக்கி விரட்டியடித்தனர். மேலும் 10 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த வலைகள் மற்றும் பலகைகளை அறுத்து கடலுக்குள் வீசி எறிந்தனர். இதனால் மீன்பிடிப்பை பாதியில் நிறுத்திய மீனவர்கள் கரை திரும்பினர்.
இதுகுறித்து மீனவ சங்கத் தலைவர் தேவதாஸ் கூறியது: மீன்பிடி தடைக்காலம் வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், இலங்கை கடற்படையினர் இந்திய எல்லைக்குள்ளே வந்து தாக்குதல் நடத்துகின்றனர்.
மேலும் தடைக் காலத்தின் போது இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும். சேதமடைந்த படகுகளுக்கு உரிய இழப்பீட்டை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். இந்திய இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை தொடங்கி தடை காலத்திற்குள் நிரந்தர தீர்வு கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை பணியில் 154 நுண் பாா்வையாளா்கள்
சாமல்பட்டி அருகே குடிநீா் குழாய்கள் உடைப்பு விவகாரம்: 5 போ் கைது
மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

ஒசூா் அருகே பிரேக் பிடிக்காததால் நீரோடையில் புகுந்த ஆம்னி பேருந்து: பயணிகள் 29 போ் காயம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

