திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மைத் திட்டம்: மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்யக் கோரிக்கை

கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மைத் திட்டம் தொடர்பாக, ஏப்ரல் 19 ஆம் தேதி ராமநாதபுரத்தில்  நடைபெறவுள்ள மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை

Updated On :18 ஏப்ரல் 2018, 8:22 am IST

கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மைத் திட்டம் தொடர்பாக, ஏப்ரல் 19 ஆம் தேதி ராமநாதபுரத்தில்  நடைபெறவுள்ள மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்யவேண்டும் என, தமிழ்நாடு மீன்பிடித் தொழிற் சங்க கூட்டமைப்பினர், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். 
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், ஆட்சியர் எஸ். நடராஜனிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு விவரம்:
கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மைத் திட்டம் குறித்து மாவட்டம்  வாரியாக  மக்கள் கருத்துக் கேட்புக்  கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டம், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வரைபடத்தில், அபாயக்கோடு குறிக்கப்படவில்லை. இத்திட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வரைபடம் தவறானது.    தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைபடங்களில் சுற்றுச்சூழலை எளிதில் பாதிக்கக்கூடிய இடங்கள் அகற்றப்பட்டுள்ளன. 
     எனவே, இது தொடர்பாக நடைபெறவுள்ள மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்யவேண்டும் என, அம் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.