ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அரசு பழத்தோட்டம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி பணி செய்ய விடாமல் தடுத்ததாக மகளிர் மன்றத் தலைவி உள்பட 28 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருவாடானை தாலுகா ஓரியூர் கிராமத்தில் தமிழக அரசு 38 ஏக்கர் பரளவில் ரூ.98 லட்சம் செலவில் பழத்தோட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் வேலி அடைத்து தற்போது சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அரசு பழத்தோட்டத்தால் அப்பகுதி மக்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், விளை நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை
உள்ளதாகவும், வழிபாட்டு தலம் மயானம் செல்வதற்கு வழி இல்லை என்றும் தங்களின்
ஆடு மாடுகளுக்கு மேய்ச்சல் நிலம் இல்லை என்றும் பழத்
தோட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறால் தங்களின் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கும் என்றும் கூறி பழத்தோட்டம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பழத்தோட்டத்துக்கு சாலை அமைக்கும் பணியினை அப்பகுதி பெண்கள் சிலர் திங்கள்கிழமை தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக எஸ்.பி.பட்டினம் போலீஸார் வழக்குப்பதிந்து ஓரியூரைச் சேர்ந்த மகளிர் மன்றத் தலைவி குழந்தை திரேசு உள்பட 28 பேரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கல்விக்கொடி!

ஜன நாயகனின் உண்மையைப் பேச தைரியம் இல்லை: இயக்குநர் வினோத்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK
தெலுங்கில் கால் பதிக்கும் கார்த்தி!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


