பாடங்களை மாணவர்களுக்கு எளிதாகப் புரிய வைத்து, அவர்களின் திறன்களை வளர்க்கும் விதமான 'கே.எல்.எம்.என். ஸ்வஸ்திக்பி' எனும் 'கல்விக்கொடி' என்கிற புதிய வரைபடக் கோட்பாட்டை வடிவமைத்துள்ளார் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கணினி பயன்பாட்டியல் துறையின் முன்னாள் கௌரவ விரிவுரையாளரும், கே.எல்.எம்.என் எஜுகேஷன் அமைப்பின் பயிற்றுநருமான முனைவர் ஜே.கோமளலட்சுமி.
மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட தனித்துவமான இந்தக் கல்வி அணுகுமுறையானது பாட அறிவோடு சிந்தனை, மதிப்புணர்வு, பொறுப்புணர்வு, சமூக பங்களிப்பு ஆகிய பரிமாணங்களுடன் இணைக்கும் பாலமாக முன்வைக்கப்படுகிறது.
''இந்தச் சின்னம் சாதாரண அலங்காரக் குறியீடு அல்ல; மாணவர் வளர்ச்சியின் திசையைக் காட்டும் கருத்தியல் அடையாளம். இது சுவர் ஓவியமாகவோ, விளக்கப் படமாகவோ பள்ளிச் சூழலில் காட்சியமைக்கப்பட்டால், மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும்'' என்கிறார் கோமளலட்சுமி.
இந்தப் புதிய முயற்சி குறித்து அவர் கூறியது:
''பிரபஞ்ச சக்தியை மையமாகக் கொண்டு தொழில், குடும்பத்தை விளக்காக உருவகப்படுத்தி, அது என்றும் பிரகாசமாக இருப்பதற்கு ஒரு மனிதன் எவ்வாறு தன் செயல்பாடுகளை வகுத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்தக் கல்விக்கொடி உணர்த்தும். தொழில்நுட்பச் சாதனம், ஆசிரியர்கள், பெற்றோர்களின் உதவியுடன் ஒவ்வொரு மாணவனின் பங்களிப்பும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.
'மாணவர்கள் தாங்கள் கற்றதைச் சிந்தனையில் ஏற்றி, அவரவர் புரிதலுக்கேற்ப அதனை விரிவாக்கம் செய்ய வேண்டும். கற்றதைச் செயல்படுத்தும் ஆற்றல் நம்மிடம் உள்ளதா? என்பதை உணரவேண்டும். பின்னர், நம்மாலும் அதைச் செய்து முடிக்க முடியும். இந்த நிலையை எட்டி, தங்களது பங்களிப்பை உறுதிப்படுத்த வேண்டும்' என்ற அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
திருக்குறள் குறிப்பிடும் குறள்பால்- பொருட்பால், இயல் -அரசியல் அதிகாரம்- அறிவுடைமை ஆகிய அதிகாரங்களுக்குச் சான்றாக கற்றல் கற்பித்தல் உபகரணமாக இந்தக் கல்விக் கொடி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி திருக்குறளின் வாழ்வியல் நெறிமுறைகளை எளிதில் உணரலாம். இயந்திரங்களிடமிருந்து மனித ஆற்றல் சுய சிந்தனை மூலம் மேம்படுத்தப்படும் என்பதையும் வழிகாட்டும்.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் கணினி உள்ளிட்ட கருவிகளுடன் மனித வாழ்க்கை பிணைந்திருந்தாலும், இயந்திர ஆற்றலைவிட மனித ஆற்றலே மேலோங்கி இருக்க வேண்டும்.
'கணினித் தமிழ்' என்ற தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ் மொழி நீண்ட காலத்துக்குத் தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது. எதிர்வரும் தலை
முறையினர் தமிழின் மாண்புகளை உணரும் வண்ணம் பள்ளிக் கல்வியில் 'கணினி அறிவியல்' என்ற ஆறாவது பாடத்தை இணைக்க வேண்டும். முதல் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை சமச்சீராக வைக்கப்பட்டு அனைத்து பாடப் புத்தகங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்தின் தொடர்ச்சியாக சுய அறிவையும், நுண்ணறிவினையும் மேம்படுத்தும் இந்தக் கல்விக் கொடி பாடலையும் பதிவு செய்து திருக்குறளையும், தமிழையும் பறக்கச் செய்யும் வெற்றிக் கொடியாகப் பயன்படுத்த வேண்டும்.
வருங்காலத்தில் மாணவர்கள் தொழில்நுட்பத்தையும், தாய் மொழியான தமிழையும் இரு கண்களாக, வாழ்வியல் நெறிமுறைகளை திருக்குறள் மூலம் உணர்ந்து கொண்டவர்களாக அறிவுடைமை பெற்றவர்களாக விளங்குவதற்கு இது ஒரு வாய்ப்பளிக்கும். ஆங்கிலம், பிற மாநில மொழியிலும் இந்தக் கல்விக் கொடியை மத்திய அரசு அங்கீகரித்தால், நாட்டின் சீரிய பண்புகளையும் நற்குண நலன்களையும் விஸ்வகுருவாக அடையாளப்படுத்தப்படும்.
'தேசிய கல்விக் கொள்கை' என்று கூட்டு முயற்சிக்கு கல்விக் கொடி உளவியல் ரீதியாக மனித அறிவில் செயல்படுகிறது. இது வெறும் தகவல் நினைவூட்டலை மட்டும் குறிக்காமல், மாணவர் அறியாததிலிருந்து அறிதலுக்கு நகரும் நிலையை, அறிய விரும்பும் மனப்பாங்கை, அறிவை ஏற்கத் தயாராகும் அடிப்படை உளவியலை அடையாளப்படுத்தும் கூறாகும்.
கல்வி என்பது ஆசிரியர் சொன்னதை மனப்பாடம் செய்வதற்கல்ல. பெறப்பட்ட அறிவு புரிதலாக மாறி, பழக்கம், திறன், வாழ்க்கைப் பயன்பாடு ஆகியவற்றோடு இணையும் நிலையாக இந்தப் பரிமாணம் விளக்கப்படுகிறது.
கற்றவர் தனக்காக மட்டும் முன்னேறாமல், பள்ளி, குடும்பம், சமூகம், நாடு ஆகியவற்றுக்குப் பயன் தரும் வகையில் ஏதாவது புதிய பங்களிப்பு செய்ய வேண்டும். இதுவே கல்வியைச் செயற்பாட்டுடன் கூடிய மனித வளர்ச்சியாக மாற்றுகிறது. மாணவரின் அறியாமையை நீக்கி, மனிதராக மாற்ற வேண்டும். கல்வி மூலம் கிடைக்கும் ஞானம் பின்னர் உலகுக்கும் பயன்பட வேண்டும்.
மாணவர்கள் பிறரின் பங்களிப்பை உணர்ந்து மதித்தால்தான் தானும் சமூகத்துக்குத் திருப்பிப் பங்களிக்க முனைவார்கள். குடும்பம், ஆசிரியர், இயற்கை, எண்ம சமூகம், பிரபஞ்சம் ஆகிய பல தளங்களின் பங்களிப்பால் அறிவொளி பெறும் மாணவர் பின்னர் சமூகத்துக்குத் திருப்பிப் பங்களிக்க வேண்டும்.
ஜே.கோமளலட்சுமி.
இன்றைய கல்வி சூழலில் கல்விக்கொடியின் வலிமை அதன் எளிய காட்சி வடிவமைப்பிலும், பல்வேறு வகுப்பறை நிலைகளில் மாற்றியமைத்துப் பயன்படுத்தக்கூடிய திறனிலும் இருக்கிறது. இது வெறும் சின்னமல்ல; அது ஒரு கல்வித் தத்துவத்தின் காட்சி வடிவமாகும். அதனுடன் தொடர்புடைய மாணவரை அறிதல், கற்றல், சிந்தனை ஒழுங்கு, சமூக பங்களிப்பு ஆகிய நான்கு பரிமாணங்களால் வழிநடத்த முயலும் கல்விசார் முயற்சியாகும். இதுமட்டுமின்றி, முதல்வர் சி.ஜோசப் விஜய் அறிவித்துள்ள பெண்கள் பாதுகாப்புக்கான புதிய அறிவிப்பான சிங்கப்பெண் அதிரடிப்படைக்காகவும் லோகோவை வடிவமைத்துள்ளேன்'' என்கிறார் ஜே.கோமளலட்சுமி.
-ஏ.பேட்ரிக்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நந்தனாா் கல்வி கழகம் சாா்பில் 25 மாணவா்களுக்கு உதவித் தொகை

கல்விக் கொள்கையில் கூட்டு முயற்சி தேவை

புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பை கைவிடுக: ராமதாஸ் வலியுறுத்தல்

வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


