கமுதி அருகே உடற்கல்வி ஆசிரியர் இன்றி வட்டார அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவர்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கலாவிருத்தி மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான பள்ளிகளுக்கிடையே கபாடி போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் 15 பள்ளிகள் பங்கேற்றன. இதில் ராமசாமிபட்டி பள்ளி மாணவர்கள் முதலிடத்தை பிடித்தனர். கமுதி அடுத்துள்ள செய்யாமங்களம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வட்டார அளவில் இராண்டாம் இடம் பிடித்தனர்.
இப்பள்ளியில் மொத்தம் 50 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு தேர்வில் மூன்று மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேலும், அறிவியல், சமூக அறிவியலில் இரண்டு மாணவர்கள் நூற்றுக்கு நூறும் பெற்று, தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் 100 சதவீதம் தேர்சி பெற்று அரசு பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. மேலும் ரூ. 1.5 கோடி செலவில் பள்ளிக்கான கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்து வருகிறது. உடற்கல்வி ஆசிரியர் இன்றி வட்டார அளவில் வெற்றி பெற்ற, இப்பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தி, கபடி போட்டிக்கு தயார் செய்த ஆசிரியர் ரமேஷ்கண்ணன், மற்றும் மாணவர்களை செய்யாமங்களம் கிரம மக்கள், மாணவர்களின் பெற்றோர்கள் வெகுவாகப் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமைச்சர் ஒதுக்கீடு எனக்கே தெரியாது: புதுவை முதல்வர் வேதனை | Puducherry |

நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறும் முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இன்றைய செய்திகள் ஜூலை 27 - நேரலை

இ20 மக்கள் கட்சிக்கு பெருகும் ஆதரவு! 3 லட்சத்தைக் கடந்த ஃபாலோவர்ஸ்!
விடியோக்கள்

அமைச்சர் ஒதுக்கீடு எனக்கே தெரியாது: புதுவை முதல்வர் வேதனை | Puducherry |


