தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

கணவர் மீது பொய் வழக்கு: எஸ்.பி.யிடம் பெண் புகார்

எமனேசுவரம் போலீஸார் தனது கணவர் மீது பொய் வழக்குப் போட்டு அவரை கைது செய்திருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Published On :

எமனேசுவரம் போலீஸார் தனது கணவர் மீது பொய் வழக்குப் போட்டு அவரை கைது செய்திருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனாவை  சந்தித்து பெண் ஒருவர்  திங்கள்கிழமை  புகார்  செய்துள்ளார். 
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள வளையனேந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் முருகன். ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் முதுகுளத்தூர் அருகேயுள்ள ஆண்டிச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த பாலாவிடம் பணம் கடனாக பெற்றிருந்தாராம். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இந் நிலையில் எமனேசுவரம் காவல் நிலையத்தில் முருகன் தனது ஆடுகளை திருடி விட்டதாக பாலா புகார் செய்துள்ளார். இப்புகாரின் பேரில் போலீஸார் முருகனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
இந்நிலையில் முருகனின் மனைவி காரக்கால்(35) ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனாவை சந்தித்து கொடுத்துள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பது:
என் கணவருக்கும்,ஆண்டிச்சிகுளம் பாலாவுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதைப் பயன்படுத்தி அவர் அளித்த புகாரை முன்னிட்டு பரமக்குடி டி.எஸ்.பி. உத்தரவின் பேரில் எமனேசுவரம் போலீஸார் வழக்கு பதிந்து என் கணவரை கைது செய்திருக்கின்றனர். இது உள்நோக்கத்துடன் கொடுக்கப்பட்ட புகாராகும்.  எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.