தங்கம் விலை குறைந்தது! 4 நாள்களில் ரூ. 2,920 சரிவு!அமைச்சரவையில் மாற்றமா? இன்று ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைவு!தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

தனிச்சியத்தில் சேதமடைந்த பள்ளிக் கழிப்பறையை சீரமைக்கக் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம்  சிக்கல் அருகே தனிச்சியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கழிப்பறை சேதம் அடைந்த நிலையில் இருப்பதால் மாணவர்கள் திறந்த வெளியை பயன்படுத்துகின்றனர்.

Updated On :

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம்  சிக்கல் அருகே தனிச்சியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கழிப்பறை சேதம் அடைந்த நிலையில் இருப்பதால் மாணவர்கள் திறந்த வெளியை பயன்படுத்துகின்றனர்.
இப்பள்ளியில் 1முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ளது. இதில் 2 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 25 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பள்ளிக் கழிப்பறை முற்றிலும் சேதமடைந்த நிலையில் இருப்பதால் மாணவர்கள் அச்சமடைந்து பள்ளிக்கு அருகில் திறந்த வெளியில் இயற்கை உபாதைகள் கழிக்கின்றனர்.  இதனால் சுகாதாரக் கேடும், மாணவர்களுக்கு உடல் நிலை பாதிக்கப்படும் நிலையும் உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டில் மராமத்து பணிகள் செய்து முடித்ததாக கூறி வர்ணப்பூச்சு அடித்து வைத்துள்ளனர். ஆனால் அக்கட்டடம் முழுவதும் சேதமடைந்த நிலையில் மாணவர்களுக்கு எந்தவிதமான பயனும் இல்லாமல் உள்ளது. இது குறித்து தனிச்சியத்தைச் சேர்ந்த கார்த்திக்குமார் கூறியது: 
மாணவர்கள் பாட இடைவேளை நேரத்தில் முள்புதர்களுக்குள் சென்று இயற்கை உபாதைகளைக் கழிக்கின்றனர். எனவே கழிப்பறையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் வட்டார கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.