ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

தொண்டி அருகே மீனவர்களிடையே மோதல்

திருவாடானையை அடுத்த தொண்டி அருகே மீனவர்களிடையே ஞாயிற்றுக்கிழமை மோதல் ஏற்பட்டது. 

Published On :

திருவாடானையை அடுத்த தொண்டி அருகே மீனவர்களிடையே ஞாயிற்றுக்கிழமை மோதல் ஏற்பட்டது. 
 தொண்டி அருகே உள்ள நம்புதாளையைச் சேர்ந்த மீனவர்கள் முத்துராஜா, பூவராஜன், செல்வம், காளிதாஸ் ஆகிய 4 பேரும் ஒரு படகில் மீன்பிடிக்க  ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடலுக்குள் சென்றுள்ளனர்.
         அப்போது தொண்டி புதுக்குடியைச் சேர்ந்த இரண்டு படகில் வெடிவைத்து மீன் பிடித்து கொண்டிருந்துள்ளனர். இதனை நம்புதாளையைச் சேர்ந்த மீனவர்கள் தங்களது செல்லிடப்பேசியில் படம் பிடித்துள்ளனர். இதனால், புதுக்குடி மீனவர்கள், நம்புதாளை மீனவர்களை கடலில் வைத்து தாக்கியுள்ளனர்.
 இந்த சம்பவத்தால் நம்புதாளை, புதுக்குடி மீனவ கிராமத்தினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும், மீனவர் முத்துராஜா காயமடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
 இதுகுறித்து முத்துராஜா அளித்த புகாரின்பேரில் கடலோர காவல் படையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் மோதல் ஏற்படாதவாறு பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.