கடலாடியில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவது தொடர்பாக ஆசிரியர்களுக்கு திங்கள்கிழமை பயிற்சி முகாம் நடைபெற்றது.
கடலாடியில் அனைவருக்கும் கல்வி இயக்கம், வட்டார வள மையம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவின்பேரில் கடலாடி ஒன்றியத்திற்குள்பட்ட நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு கடலாடி வட்டார கல்வி அலுவலர் பாண்டீஸ்வரி தலைமை வகித்தார். வட்டார வள மைய கல்வி அலுவலர்கள் சண்முகம், வசந்தபாரதி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் மோகனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியின் போது மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்துவது, விரைவான தகவல்களை பெறக்கூடிய குறீயிடு மற்றும் பட்டய தகடு பயன்படுத்துதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆசிரிய பயிற்றுநர்கள் பெர்ஜின், சரவணன், பிராங்லின் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணம்மாள், மதிப்பிரியா ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








