கமுதி ஒன்றியத்துக்கு ரூ. 1.98 கோடி நிதி ஒதுக்கி 4 மாதங்களாகியும் குடிமராமத்து பணிகள் தொடங்கப்படவில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
கமுதி ஒன்றியத்தில் பொந்தம்புளி, காடமங்குளம், எருமைக்குளம், முத்தாதிபுரம், கீழராமநதி, நீராவி உள்ளிட்ட கண்மாய்களில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ள ரூ. 1.98 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், 4 மாதங்களாகியும் பணிகள் நடைபெறாமல் நிலுவையில் உள்ளது.
மாவட்டத்தில் உள்ள விவசாய பாசனம் பெறும் கண்மாய்களை தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் நடத்தாமல், மாவட்ட சார் பதிவாளர் அலுவலகதத்தில் 51 சதவீதத்துக்கு அதிகமான உறுப்பினர்களை கொண்ட பதிவு பெற்ற அந்தந்த பகுதி விவசாய சங்களின் மூலம் குடிமராமத்து பணிகளை நடத்த அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இத்திட்டம் விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள் குடிமராமத்து பணிகளை நடத்த விடாமல் மாவட்ட நிர்வாகத்துக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பொந்தம்புளி விவசாயிகள் கூறியதாவது: பொந்தம்புளி கண்மாயை குடிமராமத்து திட்டத்தில் தூர்வார ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட பதிவு துறையில் முறையாக 51 சதவீத உறுப்பினர்களை கொண்டு பதிவுபெற்ற பொந்தம்புளி நீர்பாசன விவசாய சங்கம் இதற்காக விண்ணப்பித்துள்ளது. இருப்பினும் அரசில்வாதிகளின் தலையீட்டால் இப்பணிகள் 4 மாத காலமாக தாமதமாகி வருகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் முறையாக பதிவு பெற்ற விவசாய சங்களின் நலன் கருதி பதிவுபெற்ற விவசாய சங்கங்களுக்கு இப்பணிகளை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து பொதுப்பணிதுறை அதிகாரிகள் கூறியதாவது:
கமுதி ஒன்றியத்தில் தாமதமாகி வரும் 6 கண்மாய்களின் குடிமராமத்து பணிகளை ஓரிரு நாள்களில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் பதிவுபெற்ற விவசாய சங்கங்களுக்கே வழங்கப்படும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






