ராமேசுவரம் பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். எனவே இச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேசுவரத்தில் கோயில், தனுஸ்கோடி, மதுரை, கெந்தமாதனபர்வம் என நான்கு சாலைகள் இணையும் திட்டகுடி பகுதி முக்கிய சந்திப்பு சாலையாக உள்ளது. இந்த சாலையில் கெந்தமானபர்வம் பகுதிக்கு செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. மேலும் சாலையின் ஓரத்தில் உள்ள கழிவு நீர் கால்வாய் மூடப்படாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் காவேரி கூட்டு குடிநீர் திட்டக் குழாய் பூமிக்கு கீழே செல்வதால் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவால் சாலையை உடைத்துக் கொண்டு தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் அங்கு மிகப் பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளம் காரணமாக பெரிய வாகனங்கள் செல்லும் போது விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே இச் சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









