ஆசிய பாரா விளையாட்டு: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 27 கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ரத்து

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் 27 கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக மாவட்ட கூட்டுறவு சங்ககளின் ஆணையாளர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.

Updated On :

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் 27 கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக மாவட்ட கூட்டுறவு சங்ககளின் ஆணையாளர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியது:
   ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 துணை பதிவாளர்கள் வீதம் ராமநாதபுரத்தில் 45 ம், பரமக்குடியில் 84 என மொத்தம் 129 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவற்றில் நீதிமன்ற வழக்குகள் உள்ள 27 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.  இதில் புகார் மனுக்களின் பேரில் பரமக்குடி துணை பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள கமுதி அருகே கோவிலாங்குளம், காத்தனேந்தல், முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி, பிரப்பன்வலசை, அழகுமலையான் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் என 5 கூட்டுறவு சங்கங்களுக்கு நடைபெற்ற தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் தேர்தல் அலுவலர்களால் ஏர்.ஆர்.மங்கலம், பாரனூர், தும்படைக்கோட்டை, கொட்டகுடி, ஆர்.எஸ்.மங்கலம், வளமாவூர், பொதுவக்குடி, பெருங்கரை, தடுத்தலான்கோட்டை, விளத்தூர், பாம்பூர், வெங்கிட்டான்குறிச்சி,  மென்னந்தி, எஸ்.வி.மங்கலம், ஏ.புனவாசல், மேலக்கிடாரம், செவல்பட்டி, பூக்குளம், நரிப்பையூர், கே.பாப்பாங்குளம் ஆகிய 20 கூட்டுறவு சங்கங்கள், பாரபட்சமாக தேர்தல் நடத்தபட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மைக்கேல்பட்டணம், நிலமழகியமங்கலம் ஆகிய 2 கூட்டுறவு சங்கங்கள் என 27 கூட்டுறவு சங்கங்களுக்கு நடைபெற்ற தேர்தல் ரத்து செய்யபட்டுள்ளது. மீதமுள்ள கூட்டுறவு சங்கங்களில் தலைவர், இயக்குநர்களுக்கான தேர்தல் அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாக மாநில கூட்டுறவு சங்கங்களின் ஆணையர் ராஜேந்திரன் அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.