ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுவிநியோகத்திட்ட குறைதீர்க்கும் கூட்டம் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் மாதந்தோறும் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இம்மாதம் வரும் 11 ஆம் தேதி இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
ராமநாதபுரம் வட்டாரத்தில் அச்சுந்தன்வயல், ராமேசுவரத்தில் கிராம நிர்வாக அலுவலர் சாவடி, திருவாடானையில் மணலூர், பரமக்குடியில் போகலூர், முதுகுளத்தூரில் மட்டியரேந்தல், கடலாடி தாலுகாவில் மீனங்குடி, கமுதியில் நகரத்தார் குறிச்சி, கீழக்கரையில் பெரியபட்டிணம் ஆகிய இடங்களில் பொது விநியோகத்திட்ட குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படும்.
இக்கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன் பெறலாம்.
குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், திருத்தம் போன்ற குறைகள் இருந்தால் அதனை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரஷியா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 12 பேர் பலி

ஐசிஎல் ஃபின்கார்ப் நிறுவனத்தின் கடன் பத்திரங்கள் அறிமுகம்!

ஜார்க்கண்ட் போராட்டம் பற்றிப் பேசாமல் இரட்டை வேடம் போடும் ராகுல் காந்தி: பாஜக கண்டனம்!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்! தனித் தீர்மானம் நிறைவேற்றம்! | TN Assembly | TVK
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்! தனித் தீர்மானம் நிறைவேற்றம்! | TN Assembly | TVK


