ராமநாதபுரத்தில் உபயோகமற்ற பொருள்களை இலவசமாக வழங்கும் வகையிலான நம் சுவர், நம்மால் சிலர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகில் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் ஆர்.ஆனந்த் சார்பில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தாத பொருள்களை இங்கு கொண்டு வந்து வைக்கலாம். அவற்றை தேவைப்படுவோர் இலவசமாக எடுத்துச் செல்லலாம். இத்திட்டத்தை ராமநாதபுரம் டி.எஸ்.பி. எஸ்.நடராஜன் ஏழைகளுக்கு இலவசமாக சட்டைகள்,சேலைகளை வழங்கி தொடக்கி வைத்தார்.
இது குறித்து மருத்துவர் ஆர்.ஆனந்த் கூறியது: வீட்டில் மீதமாகிப்போன உணவுப் பொருள்கள்,குளிர் பானங்கள் உள்பட எதையும் இங்குள்ள குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டு போய்விடலாம். அதை தேவைப்பட்டவர்கள் எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம். தேவையில்லாமல் இருக்கும் துணிமணிகளையும் இங்கு வைக்கலாம். அதை வேண்டுபவர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்றார்.