ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

கோயிலை சுற்றி போடப்பட்ட சிமென்ட் சாலை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி

திருவெற்றியூரில் கோயிலைச் சுற்றி போடப்பட்டுள்ள சிமென்ட் சாலை சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்துள்ளாகும் நிலை உள்ள்து.

Updated On :20 ஆகஸ்ட் 2018, 7:51 am IST

திருவெற்றியூரில் கோயிலைச் சுற்றி போடப்பட்டுள்ள சிமென்ட் சாலை சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்துள்ளாகும் நிலை உள்ள்து.
திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூரில் பாகம்பிரியாள் அம்மன் கோயிலைச் சுற்றி நான்கு வீதிகளிலும் சிமென்ட் சாலை போடப்பட்டுள்ளது. இச் சாலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. 
இதனால் தற்போது இது சேதம் அடைந்து  மண் சாலையாக மாறிவிட்டது. மேலும் பல இடங்களில் குண்டு குழியுமாக உள்ளது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில் முக்கியமான இந்த திருத்தலத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்கு தினமும்  ஏராளமான வெளியூர் பக்தர்கள் வருகின்றனர். இக் கோயிலைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் சாலை பழுதடைந்து மண் சாலையாக மாறிவிட்டது . 
இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். சித்திரை திருவிழா தேரோட்டத்தின்போது தேர் இழுக்க பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். 
எனவே தேரோடும் வீதியில் உள்ள இச் சாலையை மீண்டும் புதிதாக அமைக்க வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.