நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

பெருநாழியில் மக்கள் தொடர்பு முகாம்

கமுதி அருகே பெருநாழியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 81 பயனாளிகளுக்கு ரூ. 7 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

கமுதி அருகே பெருநாழியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 81 பயனாளிகளுக்கு ரூ. 7 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
   முகாமில் மாவட்ட துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு நலத்துறை) காளிமுத்து தலைமை வகித்தார். கமுதி வட்டாட்சியர் முருகேசன் முன்னிலை வகித்தார். முகாமில் முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், ஊனமுற்றோர் உதவி தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, ஊனமுற்றோருக்கான சைக்கிள்கள், விவசாயக்கருவிகள் என 81 பயனாளிகளுக்கு, ரூ.7 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டன. 
முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் மரகதமேரி வரவேற்றார்.  மண்டல துணை வட்டாட்சியர் தென்னரசு, வருவாய் ஆய்வாளர் ரமேஷ் உட்பட  ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.