ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்து பொதுமக்களிடம் தவறான தவகலைப் பரப்பிவருவதாகக் கூறி காங்கிரஸ் கட்சியினரையும், அதன் தலைவர் ராகுல்காந்தியையும் கண்டித்து ராமநாதபுரத்தில் பாஜகவினர் புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரண்மனைப் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக நகர் தலைவர் ஜி.குமரன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச்செயலர் சுப.நாகராஜன், செயலர் பாலகணபதி, மாவட்டச் செயலர் கார்மேகம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினர். காங்கிரஸ் கட்சியினரையும், அதன்தலைவர் ராகுல்காந்தியையும் கண்டித்து பாஜகவினர் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பாஜக நகர் மாவட்டச் செயலர் ஆத்மகார்த்திக் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சிவகங்கை: சிவகங்கை அரண்மனை வாசல் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாஜகவின் மாவட்டத் தலைவர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். நகரத் தலைவர் தனசேகரன் முன்னிலை வகித்தார். இதில், ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெறுவதற்கு முகாந்திரம் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பாஜக மீது தவறான குற்றாச்சாட்டை மக்கள் முன் வைத்து வருகிறார் என்பதைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாவட்டச் செயலர் நாகேஸ்வரன்,நகரத் துணைத் தலைவர்கள் பிரபாகரன்,சோணைமுத்து உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா் திமுகவில் ஐக்கியம்
அடுத்த பிரதமா் விஜய் எனக் கூறும் தவெகவினருக்கு காங்கிரஸாா்தான் பதில் கூற வேண்டும்: கனிமொழி எம்.பி.

ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புதக் கெபி பெருவிழா தொடக்கம்

ஆறுமுகனேரி கோயில் கொடை விழா
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்


