
தொண்டியில் மின்கம்பங்கள் சேதம் விபத்து அபாயம்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மாற்றியமைக்கவும், சேதமடைந்த மின்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மாற்றியமைக்கவும், சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைக்கவும் மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொண்டி எம்ஜிஆர் நகர் பகுதியில் மின் கம்பங்களில் உள்ள மின்கம்பிகள் கைக்கு எட்டும் தூரத்தில் செல்கிறது. ஒவ்வொரு மின் கம்பத்திற்கு அதிக இடைவெளி இருப்பதால் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. சில மின்கம்பங்களில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விபத்து அபாயம் உள்ளது. இதனால் இப்பகுதியில் செல்லும் மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் சகுபர் சாதிக் கூறியது: இப்பகுதியில் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன.
மின்கம்பிகள் தாழ்வாக செல்வதாகவும் பல்வேறு புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மின்வாரியம் விபத்து வரும் முன் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





