ராமநாதபுரத்தில் 12 புதிய அரசுப் பேருந்துகள்: அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 12 புதிய அரசுப் பேருந்துகளை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை


ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 12 புதிய அரசுப் பேருந்துகளை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மு.மணிகண்டன் சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 35 புதிய அரசுப் பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் முதற்கட்டமாக 12 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். அரசுப் போக்குவரத்துக் கழக பொதுமேலாளர் வி.செல்வகோமதி குமார் முன்னிலை வகித்தார். இதில், தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மு.மணிகண்டன், புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து, கீழக்கரை - உத்தரகோசமங்கைக்கு நகர்ப் பேருந்தை (தடம் எண்-18) நல்லாங்குடி, எக்ககுடி கிராமங்கள் வழியாக கொத்தங்குளம் வரையும், கீழக்கரை-சென்னை
அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக சொகுசுப் பேருந்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் போக்குவரத்துக்கழக கிளை மேலாளர்கள் தெய்வேந்திரன், பத்மகுமார், பாலமுருகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...