வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மணல் திருட்டு: 5 பேர் கைது

கமுதி அருகே மணல் திருட்டில்  ஈடுபட்ட 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து டிப்பர் லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On :9 ஜூலை 2018, 1:22 am

கமுதி அருகே மணல் திருட்டில்  ஈடுபட்ட 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து டிப்பர் லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கமுதியை அடுத்த மணடலமாணிக்கம் புத்துருத்தி அருகே குண்டாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக போலீஸாருக்கு புகார்கள் சென்றன. அதையடுத்து, மண்டலமாணிக்கம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மதுமதி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனையிட்டனர்.
அப்போது, அப்பகுதியில் மணல் ஏற்றிய நிலையில் இருந்த இரண்டு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர். அவற்றின் ஓட்டுநர்களான முதுகுளத்தூர் செல்லியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த அழகர்சாமி மகன் கார்த்திக் (27), பாளையங்கோட்டையை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் மகன் சுபாஷ் (22) ஆகியோர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
இதேபோல் அபிராமத்தில் ஆற்றுப்பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட  டிப்பர் லாரி, பொக்லைன் இயந்திரம், டிராக்டர் உள்ளிட்ட 3 வாகனங்களை அபிராமம் போலீஸார் பறிமுதல் செய்து, அவற்றின் ஓட்டுநர்களான மருதங்கநல்லூர் கருப்பசாமி, சைவத்துரை, அபிராமம் பச்சேரி அன்புசினேகன் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.