போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

ராமநாதபுரத்தில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன்பாக ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :9 ஜூலை 2018, 1:18 am

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன்பாக ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் முதல் சென்னை வரை 8 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் போராடிய போது அவர்களை கைது செய்தததைக் கண்டித்தும், அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ராமநாதபுரம் வட்டார செயலாளர் பி.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் எம்.முத்துராமு, மாவட்ட செயலாளர் வி.மயில்வாகனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் கோரிக்கையை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க மாவட்ட தலைவர் இ.கண்ணகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராமநாதபுரம் வட்டாரச் செயலாளர் செல்வராஜ் உள்பட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.