ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள் ள வணிக வளாகம் அருகில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பலாயின.
ராமநாதபுரம் அரண்மனைப் பகுதியில் வணிக வளாகம் அருகில் பாழடைந்த கட்டடத்தின் முன்புறம் குப்பை கொட்டும் இடம் உள்ளது. இந்த இடத்தில் வியாழக்கிழமை மாலை திடீரென தீப்பிடித்து தீ மளமளவென பரவியது. தகவலறிந்து ராமநாதபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் நாகராஜ் தலைமையிலான குழுவினர் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் பாழடைந்த அந்த கட்டடத்தின் கதவுகள், ஜன்னல்கள் ஆகியன உள்பட சுமார் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமாகின. அதேபோல பழைய கட்டடத்தின் மேல் பகுதியில் கொட்டப்பட்டிருந்த கழிவுத் துணிகள், வாழைத் தோகைகள் ஆகியனவும் தீப்பிடித்து எரிந்தன. சம்பவம் குறித்து ராமநாதபுரம் பஜார் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சரவணம்பட்டியில் பி.ஆா்.ஜி. அருண்குமாரை ஆதரித்து அண்ணாமலை பிரசாரம்

இஸ்லாமியா்களுக்கு என்றும் அதிமுக உறுதுணையாக இருக்கும்

அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

கடையநல்லூரில் திமுக நிா்வாகியிடம் ரூ.44 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

