உலகம் முழுவதும் சோனி பிஎஸ்5 ப்ரோ விலை உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் அதன் விலை என்ன, மாற்றம் இருக்கிறதா என்று பலரும் தேடி வருகிறார்கள்.
ஆனால், இந்தியர்களுக்கும், விளையாட்டுப் பிரியர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் இந்தியாவில் மட்டும் சோனி பிஎஸ்5 ப்ரோ விலை மாற்றமின்றி நீடிக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன், ஆசிய நாடுகளில், சோனி தன்னுடைய உற்பத்திப் பொருள்களின் விலைகளை உயர்த்தியிருப்பது குறித்து அறிவிப்பினை வெளியிட்டு அதனை வாங்கக் காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதேவேளையில், இந்தியாவிலும் சோனி பிஎஸ்5 விலை எப்போது வேண்டுமானாலும் உயரலாம் என்ற எண்ணமும் இருந்தது.
மெமரி சிப்ஸ் விலை ஏற்றம் மற்றும் சர்வதேச பொருளாதார காரணிகளால் சோனி பொருள்களின் விலை உயர்த்தப்பட்டதாகவும் அந்த நிறுவனம் விளக்கம் கொடுத்திருந்தது. இந்த விலை ஏற்றம் 2026 ஏப்ரல் 2ஆம் தேதி முதலே நடைமுறைக்கும் வந்துவிட்டது. இது ஒரே ஆண்டுக்குள் நடந்த இரண்டாவது விலையேற்றம் என்றும் அதிருப்திகள் வெளியாகின.
ஆனால், இந்தியாவில் பிஎஸ்5 மற்றும் சோனி பிஎஸ்5 ப்ரோ விலைகள் அப்படியே மாற்றமின்றி உள்ளன. அதாவது சோனி பிஎஸ்5 விலை ரூ.54,990 முதல் ரூ.59,990 என அதன் வேறுபாடுகளுக்கு எற்ப இந்திய சந்தைகளில் விற்பனையாகிறது.
அதுபோல பிஎஸ் 5 ப்ரோ விலையும் ரூ.85 ஆயிரத்தை ஒட்டியே இருப்பதாகவும், நகரங்கள் மற்றும் செல்போன் வேறுபாடுகளுக்கு ஏற்ப விலையில் மாற்றம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரான் அமைதி ஒப்பந்தம்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

ஐபோன் 18 ப்ரோ சிறப்புகள் என்னென்ன? எத்தனை நிறங்களில் கிடைக்கும்?

ஒசூரில் பப்பாளி கிலோ ரூ. 40-க்கு விற்பனை: விவசாயிகள் மகிழ்ச்சி
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



