ரெட்மி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஏ7 ப்ரோ இந்தியாவில் அறிமுகமானது. பட்ஜெட் விலையில் 6.9 அங்குல பெரிய திரையுடன் பேட்டரி திறனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரெட்மி நிறுவனம், இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது. அந்தவகையில் இம்முறை ஏ7 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எனினும், தற்போது பலரும் 4ஜி இணைய பயன்பாட்டை விரும்பும் நிலையில், இந்த ஸ்மார்ட்போன் 4ஜி இணைய பயன்பாட்டை மட்டுமே பயன்படுத்த முடியும்.
ரெட்மி ஏ7 ப்ரோ சிறப்பம்சங்கள்
யுனிசாக் டி7250 புராசஸர் கொண்டுள்ளது,
6,000mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 15W திறன் உடையது. ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் இரு நாள்கள் தாங்கும் என ரெட்மி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இரட்டை சிம்கார்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
தனியாக நினைவக அட்டையையும் பயன்படுத்தலாம்.
கூகுள் சர்க்கிள், செய்யறிவு அம்சங்கள் உள்ளன.
ஆரஞ்சு, கருப்பு, கருநீலம் என மூன்று வண்ணங்களில் கிடைக்கின்றன.
4GB உள்நினைவகம் (RAM) மற்றும் 64GB நினைவகம்
4GB உள்நினைவகம் (RAM) மற்றும் 128GB நினைவகம் என இரு வகைகளில் கிடைக்கின்றன.
Summary
Redmi A7 Pro smart phone launches from RM399 with a 6.9in screen and 13-megapixel camera
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

6500mAh பேட்டரி திறன்... மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்!

பட்ஜெட் விலையில் ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போன்! ஏ7 ப்ரோ அறிமுகம்!
லாவாவின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்! ரூ. 7,999 மட்டுமே..!

ஒருமுறை சார்ஜ் செய்தால் 2 நாள்கள் தாங்கும்! அறிமுகமானது போக்கோ சி85 எக்ஸ்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



