கமுதி அருகே உள்ள காக்குடியில் சேதமடைந்துள்ள சிறு பாலத்தை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கமுதியிலிருந்து காக்குடி வழியாக புத்துருத்தி செல்லும் வழியில் சாலையின் குறுக்கே 8 ஆண்டுகளுக்கு முன் சிறு பாலம் அமைக்கப்பட்டது. இப்பாலம் அமைக்கப்பட்ட சில நாள்களிலேயே சிமென் பூச்சுகள் உதிர்ந்து, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிந்தது. அப்போது முதல் இவ்வழியாக வாகனங்களை இயக்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
மேலும் அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. சேதமடைந்த பாலத்தால் விவசாய நிலங்களை உழுவதற்கு வாகனங்கள், உரம், பூச்சி மருந்துகள் எடுத்து செல்வதிலும், புத்துருத்தி கிராமத்துக்கு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கமுதியில் இருந்து காக்குடி வழியாக 6 கி.மீ தொலைவில் புத்துருத்தி செல்ல வேண்டிய கிராம மக்கள், மண்டலமாணிக்கம் வழியாக 11 கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே, காக்குடியில் சேதமடைந்த சிறு பாலத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிப்பதை கட்டாயமாக்க முடியாது: பொது நல மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

கேரளத்தில் தோ்தல் முடிவுகள் வரும் முன்பே காங்கிரஸில் முதல்வா் பதவிக்குப் போட்டி!

ஆந்திரத்தில் டேங்கா் லாரி - மினி லாரி மோதி விபத்து: 8 போ் உயிரிழப்பு

எல்ஐசியின் புதிய செயலிகள் அறிமுகம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

