செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

காக்குடியில் மயான சுற்றுச் சுவர் இடிந்து சேதம்: தரமில்லாமல் அமைத்ததாக புகார்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே காக்குடியில் தரமின்றி அமைக்கபட்டதால் மயான சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Updated On :14 மே 2018, 6:27 pm

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே காக்குடியில் தரமின்றி அமைக்கபட்டதால் மயான சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கமுதி அருகே காக்குடியில் கடந்த 2013 ஆம் ஆண்டில் பொது மயானத்தில் ரூ.3 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பீட்டில் எரியூட்டும் மேடை மற்றும் சுற்றுச் சுவர் அமைக்கபட்டது. இந்த சுவர் ஹாலோ பிளாக் கற்களால் அமைக்கபட்ட சில நாள்களிலேயே சேதமடைந்து இடிந்து விழுந்தது. தரமின்றி கட்டப்பட்டதால் சுவர் இடிந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் மயானம் வழியாக பெண்கள், சிறுவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் தலையிட்டு சேதமடைந்துள்ள சுற்றுச் சுவரை சீரமைத்து, அங்கே பயன்பாடின்றி உள்ள கை அடிபம்புக்குப் பதிலாக, புதிய ஆழ்துளைக் கிணறு, குழாய் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.