எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

முடிதிருத்தும் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தைக் கண்டித்து ராமேசுவரத்தில் திங்கள்கிழமை முடி திருத்தும் தொழிலாளர்கள் சலூன்களை அடைத்து உண்ணாவிரமிருந்தனர்.

News image
Updated On :14 மே 2018, 6:59 pm

DIN

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தைக் கண்டித்து ராமேசுவரத்தில் திங்கள்கிழமை முடி திருத்தும் தொழிலாளர்கள் சலூன்களை அடைத்து உண்ணாவிரமிருந்தனர்.
கடலூரில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிதிருத்தும் தொழிலையும், தொழிலாளர்களையும் இழிவுபடுத்தும் விதமாக அமைச்சர் பேசியதாகக் கூறி இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையொட்டி ராமேசுவரம், மண்டபம் ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகள் மற்றும் ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் 500- க்கும் மேற்பட்ட முடி திருத்தும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அனைத்து மருத்துவர் சமூதாய கூட்டமைப்பு சார்பில் ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதில் அந்த அமைப்பின் மாவட்டத் தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். மண்டபம் ஒன்றியத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் 300-க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். சங்க நிர்வாகி எஸ்.எஸ்.கணேசன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.