முதுகுளத்தூர் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
முதுகுளத்தூர் அருகே உள்ள ஆதனக்குறிச்சி வழியாக புளியங்குடியைச் சேர்ந்த கூத்தபெருமாள் மகன் சுரேஷ்கண்ணன்(19), அவரது நண்பர்கள் 3 பேர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். முன்னால் சென்ற ஆட்டோவை அவர்கள் முந்த முயன்றபோது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த பெண்கள் மீது மோதுவது போல் சென்றனராம். இதனால் ஏற்பட்ட மோதலில் ஆதன குறிச்சியைத் த ரஞ்சன் மனைவி முத்துலெட்சுமி (48) தாக்கப்பட்டார். இது குறித்து முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் கொடுத்தனர். முத்துலெட்சுமி கொடுத்த புகாரில் புளியங்குடியைச் சேர்ந்த சுரேஷ்கண்ணன், திருச்செல்வம், மாய ரமேஷ், கோகுலகண்ணன் மற்றும் முகேஷ் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். மற்றொரு தரப்பில் சுரேஷ்கண்ணன் கொடுத்த புகாரில் கதையன் கிராமத்தை சேர்ந்த பாண்டி மகன் சரவணன்,சத்யராஜ் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!

வளா்ச்சி அடைந்த இந்தியாவை கட்டமைக்க மக்கள் 9 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும்: பிரதமா் மோடி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

