கமுதி அருகே பாதியில் நிற்கும் அரசு நடுநிலைப் பள்ளியின் சுற்றுச் சுவர் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கமுதியை அடுத்த சின்னஉடப்பங்குளத்தில் கமுதி-மண்டலமாணிக்கம் சாலையோரம் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 60 மாணவர்கள் பயின்று வருகின்றனர். வகுப்பு நேரங்களில் பள்ளி வளாகத்தில் அத்துமீறி நுழையும் கால்நடைகளால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதனை தடுக்கும் வகையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், சுற்றுச் சுவர் அமைக்கும் பணி தொடங்கியது. இப்பணி அரைகுறையாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், கால்நடைகள் பள்ளி வளாகத்துக்குள் நுழையும் சம்பவம் தொடர்கிறது.
மேலும், சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள், கட்டுப்பாட்டை இழந்தால், பள்ளி வளாகத்துக்குள் நுழைந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கோடை விடுமுறை முடிவதற்கு முன்பாகவே சுற்றுச் சுவர் பணியை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சின்ன உடப்பங்குளம் சமூக ஆர்வலர் வாசு கூறியதாவது: சின்ன உடப்பங்குளம் பள்ளியின் சுற்று சுவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கமுதி ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
இந்த நிதி, போதுமானதாக இல்லாததால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் நிதி பற்றாக்குறை காரணத்தைக் காட்டி தட்டிக் கழிக்கின்றனர்.
அரசு பள்ளிகளின் தரம், சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றை தமிழக அரசு கடுமையாக கட்டுப்பாடுகளுடன் செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்த பள்ளியில் அதிகாரிகளின் அலட்சியத்தால் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

நடிகர் அஜித் பிறந்த நாளில் ஓர் ஏமாற்றம்!

ரயில்வே துறையில் 30,000 பணியிடங்களை அழிக்கும் பாஜக! விழிப்புணர்வு பிரசாரத்தில் CPIM!

திமுக கொலை மிரட்டல்! ஆதவ் அர்ஜூனா வேண்டுகோள்! | VCK | Vijay
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

