பாம்பன் ரயில் பாலத்தில், ரயில்வே பாதுகாப்புப் படை வெடிகுண்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் இடையிலான பாம்பன் ரயில் பாலம் தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தின் கண்காணிப்பில் இருந்து வருகிறது.
ஆண்டுதோறும், இந்தப் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு வெடிகுண்டு கண்டறியும் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து, பாதுகாப்பை உறுதி செய்வது வழக்கம். அதனடிப்படையில், திங்கள்கிழமை ரயில்வே பாதுகாப்புப் படை வெடிகுண்டு தடுப்புப் பிரிவு ராதாகிருஷ்ணன், டேனியல் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள், பாம்பன் ரயில் நிலையத்தில் இருந்து மண்டபம் பூங்கா வரையில் உள்ள தண்டவாளம் மற்றும் பாலத்தை ஆய்வு செய்தனர்.
இதில், வெடிகுண்டு கண்டறியும் சிறப்புப் பயிற்சி பெற்ற மோப்ப நாய் மாயா மற்றும் வெடிகுண்டு கண்டறியும் தொழில்நுட்பக் கருவிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் முகவராக யாருக்கு தடை?

அறிமுக சீசனிலேயே இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஹைதராபாத்..! ஆனந்தக் கண்ணீரில் லபுஷேன்!
கூட்டணிக் கட்சிகளுக்காக தேர்தல் பணியாற்றாத விசிகவினர்: தொல் திருமாவளவன்

மே நாள் விடுமுறை அளிக்காத 110 நிறுவனங்கள் மீது நடவடிக்கை!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

