தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தை கண்டித்து, பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் வியாழக்கிழமை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தமும், தங்கச்சிமடத்தில் விசைப்படகு மீனவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக வணிகர்களும் கடைகளை அடைத்தனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்றையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் வியாழக்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொண்டனர். இதனால் 500 -க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் பாம்பன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. தொடர்ந்து, பாம்பன் பேருந்து நிறுத்தம் அருகே நாட்டுப்படகு மீனவ சங்கத்தினர் 1000 -த்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாம்பன் ஊராட்சியின் முன்னாள் தலைவர் பேட்ரிக், மீன்பிடி தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தங்கச்சிமடத்தில் விசைப்படகு மீனவர் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அச்சங்கத்தைச் சேர்ந்த 500 -க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர்.
கடையடைப்பு: மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் வியாபாரிகள் கடைகளைஅடைத்து போராட்டம் மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









